EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

Byadmin

Jan 23, 2024

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *