உகண்டா சென்றார் ஜனாதிபதி!

Byadmin

Jan 18, 2024

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் (3rd South Summit of the Group of 77 & China) பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 
அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது உகண்டாவின் கம்பாலா நகரை சென்றடைந்துள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, “உலளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல்” என்ற தலைப்பில் ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது.
G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு ஜனவரி 21 – 22 ஆம் திகதி “எவரையும் கைவிடக்கூடாது” என்ற தலைப்பில் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *