இணையவழி பண மோசடி தொடர்பில் ஒருவர் கைது

Byadmin

Jan 17, 2024

இணையவழி பண மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இணையத்தில் பணம் முதலீடு செய்வதன் ஊடாக அதிகளவான வருமானம் ஈட்டலாம் என தூண்டி தனியார் வங்கிக் கணக்க் ஒன்றில் பணத்தினை வைப்பிலிட வைத்து 1,680,000 ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபரிடம் விசாரணை நடத்தப்பட்டு நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை – சிறிமல்கொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *