இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை!

Byadmin

Jan 17, 2024

2023 ஆம் ஆண்டு அனுமதியின்றி மின் கம்பிகள் பதிக்கப்பட்டதன் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பல்வேறு மனித நடவடிக்கைகளால் 2023 ஆம் ஆண்டில் 474 காட்டு யானைகளும் இறந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தரவுகளின் படி இலங்கையில் சுமார் 6,000 காட்டு யானைகள் வாழ்ந்து வருவதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மின்சார சபை, அதற்கு மக்களின் ஆதரவும் தேவை எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன்படி, வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்கப்படுவது தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *