உலகின் முதல்தர நாடாக மாற்றும் புதிய பயணம் பொங்கல் வாழ்த்துச் செய்தி!

Byadmin

Jan 15, 2024

இலங்கைவாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் தொடர்பில் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மானுட வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்து நாம் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறோம். உலகிற்கு உயிர் கொடுக்கும் சூரிய பகவானை வழிபடுவது பண்டைய காலத்திலிருந்தே நடந்து வருகிறது. தைப்பொங்கல் பண்டிகை இந்த சூரிய பகவான் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாக இந்த தைப்பொங்கள் திருவிழாவை சுட்டிக்காட்டலாம்.

தைப்பொங்கல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த நிகழ்வாகும், மேலும் இந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்ல எண்ணங்களைச் சேர்க்கும் பண்டிகை என்றும் அழைக்கலாம்.

புதிய அறுவடையை சூரிய பகவானுக்கு படைத்து அடுத்து வரும் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர வேண்டப்படுகின்றது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்மிக்க ஆண்டின் முடிவில் இன்னும் பல சவால்களுடன் இன்னுமொரு ஆண்டிற்குள் நுழைந்துள்ளோம்.

இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்களை இந்தத் தைப்பொங்கள் தினத்தில் பெற்று உலகின் முதல்தர நாடாக மாறுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *