பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கொலை

Byadmin

Jan 14, 2024

வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கியுள்ளார்.
தாக்குதல் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 13)  தங்காலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரகெட்டியார கிழக்கில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் மொரகெட்டியார கிழக்கு – நகுலோகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத போது, ​​இறந்தவர் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
பெண் தண்ணீர் கொடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்ற போது, ​​பின்னால் சென்ற அவர், பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது, ​​பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கியுள்ளார்.
பின்னர், அவர் தரையில் விழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
சடலம், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *