வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

Byadmin

Jan 11, 2024

அம்பாறை கிண்ணியாகலை சேனாநாயக்க சமுத்திரத்தில் இருந்து வெளியேறும் நீரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுவிப்பதன் மூலம் கீழ் கல் ஓயா தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு  விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அப்பிரதேசங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொல்வத்தை, பஹலலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைத்தீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..
குறிப்பாக கிளை வீதிகளில்  வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *