கொழும்பில் முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண் கைது

Byadmin

Jan 7, 2024

முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, சாரதியைத் தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கொழும்பு – கொடகவெல , பல்லேபெத்த பகுதியில் இன்று(07.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கொடகவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொடகவெல , பல்லேபெத்த பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருக்கையில், சாரதியின் கழுத்தை குறித்த பெண் நெரித்துள்ளார்.
இதன்போது அவரின் பிடிக்குள் இருந்து தப்பிக்க சாரதி முற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த முச்சக்கரவண்டியை கொள்ளையடிப்பதே தமது நோக்கம் எனவும், முச்சக்கரவண்டிக்குப் பின்னால் தனது கணவன் மோட்டார் சைக்கிளில் வந்தார் எனவும், முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதும் கணவன் தப்பிச் சென்றுவிட்டார் எனவும் மேற்படி பெண் பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *