கிம் ஜோங் உன்னின் இளைய மகளே வடகொரியாவின் அடுத்த தலைவர்..

Byadmin

Jan 6, 2024

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் இளைய புதல்வியே அவரின் அரசியல் வாரிசு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனை நடவடிக்கைகளின் போது அவருடன் அவரின் புதல்வியும் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முதன் முதலாக வடகொரிய தேசிய புலனாய்வு சேவை இதனை அங்கீகரித்துள்ளது.

கடந்த வருட இறுதியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் பங்குகொள்ளும் சகல பொது நிகழ்வுகளுக்கும் அவரது மகளும் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொது செயற்பாடுகள் பற்றி தந்தையை போல இவரும் சிறப்பாக செயல்படுவதனால் வடகொரியாவின் நிர்வாகத்தினை எதிர்காலத்தில் பொறுப்பேற்பதற்கு பொருத்தமானவர் இவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையின் சாயலை கொண்டுள்ளதனால் வடகொரிய மக்கள் தற்போது அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *