உலகில் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டது

Byadmin

Jan 6, 2024

குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய உலகின் 13 இடங்களில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் நியூஸ் தயாரித்துள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பட்டியலில் விடுமுறையை சிறப்பாக கழிக்க உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

இலங்கையில், யானைகள் போன்ற பூர்வீக வனவிலங்குகளை அருகில் சென்று பார்வையிடமுடியும். அதுமட்டுமன்றி, கடற்கரைக்கு சென்று சூரியஒளியில் நேரத்தை கழிக்க முடியும்.

“நீங்கள் இலங்கையில் தங்குமிடங்களுக்கு சுமார் 20 முதல் 40 டொலர் வரை செலவழிக்க எவ்வளவும் எதிர்பார்க்கலாம், சராசரியாாக உணவுக்கு சுமார் 5 டொலர் மட்டுமே செலவாகும்” என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, கிரீஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஒரு குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடமாக பெயரிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *