சுட்டுக்கொல்லப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்த குமாரவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி 2.5 மில்லியன் ரூபாவை வழங்கியதுடன், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் உபுல் சமிந்தவின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் உபுல் சமிந்தவின் சேவைக்காக 1.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், அத்தொகை பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனினால் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட், உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அண்மையில் அறிவித்துள்ளது.