தேசிய வைத்தியசாலையின் கார்பனீராக்சைட் விவகாரம் மறுப்பு

Byadmin

Dec 31, 2023

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் போது ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைட்டை செலுத்தி பெண் ஒருவர் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டை மறுப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மார்பக புற்றுநோய் சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார்.
             
அவருக்குத் தேவையான ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைட்டு தவறுதலாக கொடுக்கப்பட்டதாக சுகாதாரத் தொழில் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
எவ்வாறாயினும், நேற்று முன்தினம்  இரவு சத்திரசிகிச்சையின் போது குறித்த பெண் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன நேற்று தெரிவித்தார்.
இந்த மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சத்திரசிகிச்சையின் போது ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைட்டு செலுத்தியதாலேயே பெண் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டை அகில இலங்கை தாதியர் சங்கம் இன்று மறுத்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் இறுதி அஞ்சலிக்காக பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *