அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

Byadmin

Dec 25, 2023

அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அப்போது நாம் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்களை இப்போது பார்க்கின்றோம். அனுபவம் வாய்ந்த அரச அதிகாரிகள் எவ்வாறு பொருத்தமானவர்களைத் தேடுவது, எமது அளவுகோல்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள். இவை அனைத்தையும் வைத்து ஜனாதிபதி ஜனவரியில் மீண்டும் விண்ணப்பங்களை கோர உத்தரவிட்டுள்ளார். ஆரம்பத்தில் 20 லட்சம் குடும்பங்கள் இதற்கு தேர்வு செய்யப்பட்டன. இதனை 24 லட்சமாக அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *