வௌிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர் கைது

Byadmin

Dec 26, 2023

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைக்காக ஆட்சேர்ப்பு செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள்  கைது செய்துள்ளனர்.
துபாயில் அழகு நிலையங்களில் பெண்களை துப்புரவு பணியாளர்களாக வேலைக்கு அமர்த்துவதாக முகநூலில் விளம்பரம் செய்து சந்தேக நபர் இந்த மோசடியை செய்துள்ளனர்.
அதன்படி, உளவாளி மூலம் குறித்த மோசடியாளரை தொடர்பு கொண்டு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
குருநாகலில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அவர் விளம்பரம் செய்துள்ளார். 
குறித்த வேலைக்கு ஆட்சேர்ப்பதற்காக கண்டியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் வருமாறு கடத்தல்காரர் கூறியதுடன், உளவாளியுடன் பணியக விசாரணை அதிகாரிகளும் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
மோசடியாளர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​விசாரணை அதிகாரிகள் கண்டி, அம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரைக் கைது செய்தனர்.
ஒரு நிறுவனம் அல்லது நபருக்கு வெளிநாட்டு வேலையைப் பெற பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு சரியான உரிமம் உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட வேலையைப் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறியவும். அல்லது 1989 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு  அழைப்பதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *