அறநெறி பாடசாலை  பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

Byadmin

Dec 26, 2023

அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய பாடசாலைகளின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை டிசம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் 669 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சை அனுமதி பத்திரங்களை சம்பந்தப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
பரீட்சை அனுமதி பத்திரங்களை பெறாத விண்ணப்பதாரர்கள், அறநெறி பாடசாலையின் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி திணைக்கள இணையதளத்தளத்திற்கு பிரவேசித்து  கீழே உள்ள இணைப்பின் மூலம் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம்.
https://apps.exams.gov.lk/principals/admissions
 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *