1,340 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

Byadmin

Dec 22, 2023

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் இன்று  (22) கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்த வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பின்வருமாறு,
45 அடி நீளம் கொண்ட  பல நாள் மீன்பிடி படகு – 01,
KDH வேன்  – 01,
TOYOTA CHR வகை ஜீப் – 01,
 வெகன் ஆர் வகை கார் – 01,
ஹிக்கடுவ முகவரியில் 03 மாடி கட்டிடம் – 01,
ஹிக்கடுவ மஹ்மோதர பாலத்திற்கு அருகில் 04 மாடிகளைக் கொண்ட 01 வில்லா,
ஹிக்கடுவ மஹ்மோதர பாலத்திற்கு அருகில் 03 மாடிகளைக் கொண்ட 01 வில்லா,
30 பவுன் தங்கம்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களின் மொத்த சந்தைப் பெறுமதி 1,340 இலட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *