மருந்தகங்கள் சுற்றிவளைப்பு – ஐவர் கைது

Byadmin

Dec 21, 2023

வைத்திய பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த 5 சந்தேக நபர்களை சீதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (20) கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சீதுவ சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவுடன் சீதுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் சீதுவை மருந்தகங்களை சோதனையிட்டனர்.
இதன்போது பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல், மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த குற்றத்திற்காக 1600 மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 29, 32, 53 மற்றும் 65 வயதுடைய பண்டாரவளை, வெலிசர, திவுலப்பிட்டிய, நீர்கொழும்பு மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *