நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு வருடங்களில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவுகின்ற முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவி வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய பெறுகை திணைக்களத்தின் விதந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மதிப்பீட்டுச் செலவு 526.20 மில்லியன் ரூபாய்களாவதுடன், 2024 ஆம் ஆண்டுக்காக 310 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 60 திறன் வகுப்பறைகள்!
