மில்கோ நிறுவனத்திற்கு புதிய தலைவர்

Byadmin

Dec 18, 2023

மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தியை நியமிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, ஜனக தர்மகீர்த்திக்கு இந்த தலைவர் பதவிக்கான கடமைகளையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, மில்கோ நிறுவனத்தின் தலைவராக இன்று (18) தனது பணியை ஆரம்பித்தார்.
நிறுவனத்தின் ஊழியர்களின் அதிருப்தி அதிகரிப்பு மற்றும் மில்கோ நிறுவனத்தின் உற்பத்திக் குறைவு என்பனவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நியமனம் வழங்கப்படுவதாக புதிய தலைவரை நியமிக்கும் கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *