பிரித்தானிய இளவரசி அன்னே (Anne, Princess Royal) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், 13 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இளவரசி அன்னேவுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் டிம் லோரன்ஸூம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய இளவரசி!
