ராகம நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (09) பிற்பகல் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின் தாயும், காசாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்ட14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே அங்கு இருந்த சிசிடிவி கேமரா அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.