காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு தனது மகனின் திருமண பிணை தொடர்பில் கடந்த 25ம் திகதி சனிக்கிழமை சென்ற விவாகப் பதிவாளர் யு.எல். முகம்மது ஜாபிர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தார் என காதி நீதிமன்ற நீதிபதி ஏ.முகம்மட் றூபி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து ஜாபிரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (29) ஆஜர் படித்திய போது எதிர் வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.