வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

Byadmin

Nov 25, 2023
Young asian courier is using the hand of the knock at the door to deliver the goods.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வீட்டிற்கு வீடு பொருட்களை விநியோகம் செய்வதை அல்லது செய்ய வேண்டிய முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் சரக்கு போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம் நேரடியாக குறித்த நபர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
எனினும், தொடர்ச்சியான பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருத்திற்கொண்டு விநியோகம் செய்ய வேண்டிய விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க துறை தீர்மானித்துள்ளது.

நிறுத்தப்படும் சேவை

அதற்கமைய, டிசம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த முறை பொருந்தும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *