இணையத்தில் இடம்பெறும் பாரிய மோசடி அம்பலம்!

Byadmin

Nov 24, 2023

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு இணையத்தில் உடனடி கடன் வழங்குவதாக கூறி மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான நிதி மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.
மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் அழைப்பாளர்  வசந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் உடனடி கடன் வழங்கும் பல நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து தற்போது முறைப்பாடுகள் வருகின்றன.
பல்வேறு அவசர தேவைகளுக்காக இவ்வாறு கடன் பெற்றவர்கள் கூறுகையில், இணையவழி ஊடாக தமது தகவல்களை பெறும் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு குறித்த பணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடன் தொகையை விட மிகப் பெரிய தொகையை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள நிலையிலி், அந்தத் தொகையை செலுத்த முடியாவிட்டால் அவர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இப்படித்தான் இணையவழி ஊடாக கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவர் கடன் வாங்கியவரை தொலைபேசியில் மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
“130,000 கடன் வாங்கியுள்ளீர், ஒரு மணி நேரம் தருகிறேன், பணத்தைக் செலுத்தி சிலிப்பை அனுப்ப வேண்டும், வேறு முறை மூலம் பெறச் சென்றால், 1,50,000 செலுத்த வேண்டி ஏற்படும்.  பெரு மூச்சு விட்டு பயனில்லை. போனை ஓப் செய்தால் நடப்பதை பார்.
இந்த நிறுவனங்கள் குறித்து, ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. 
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க,
“பணம் பெறவும், பணம் வசூலிக்கவும், மத்திய வங்கியில் பதிவு செய்ய வேண்டும். அப்படி இல்லாமல், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மக்களை ஒடுக்குகின்றன.”
“ஒன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் டவுன்லோட் செய்ய செயலி ஒன்றை தருகின்றன. அந்த செயலி டவுன்லோடு ஆனதும் போனில் உள்ள அனைத்து தகவல்களும் அவர்களுக்கு செல்கின்றன. அப்படித்தான் மக்களை சிக்க வைக்கிறார்கள். 3,000 ரூபாயில் இருந்து கடன் கொடுக்கத் தொடங்குகிறார்கள். 365% வட்டி. ஒரு நாளைக்கு 1%.”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *