முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே, தவிர்த்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்“

Byadmin

Nov 21, 2023

ஆமதாபாத் மைதானத்துக்கு வரும் லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனமாக்குவதே எனக்கு மனநிறைவைத் தரும்”

இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் நாள் ஆஸ்திரேலியக் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த வார்த்தையைப் பேசினார்.

கம்மின்ஸ் பேசிய இந்த வார்த்தைகளை ஆதிக்க மனநிலையோடு, ஒப்பிடுவது முடியாது. கம்மின்ஸ் வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை.

தன்னுடைய சக வீரர்கள் மீது பெரும்பாலும் குறைகூறாமல் அவர்களுக்கு ஆதரவாகவே கம்மின்ஸ் கருத்துக்களை கூறக்கூடியவர். தோல்விக்கு கேப்டனாக நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் கம்மின்ஸ் தோல்விக்கான பழியை சக வீரர்கள் மீது சுமத்துவதை விரும்பாதவர்.

சக வீரர்களின் உணர்வுகளையும் கம்மின்ஸ் மதிக்கக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சாம்ப்பைன் மது விருந்து அளிப்பார்கள்.

ஆனால், இஸ்லாம் மதப்படி மது அருந்துவது தடை செய்யப்பட்டது என்பதால், அந்த விருந்துகளில் கவாஜா பங்கேற்காமல் இருந்தார். இதைக் கவனித்த கேப்டன் கம்மின்ஸ், சக வீரர்களிடம் இதை எடுத்துக்கூறி, கவாஜாவுக்காக, சாம்பைன் மது விருந்துக் கொண்டாட்டத்தை நடத்தாமல் தவிர்த்தார்.

கம்மின்ஸும், சக வீரர்களும் தனக்காக சாம்பைன் கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்ற செய்தியை அறிந்த கவாஜா மெய்சிலிர்த்துப் போனார். கேப்டன் கம்மின்ஸ் சக வீரர்களின் உணர்வுகளை மதிக்கும் இந்த செயல்பாடு வீரர்கள் மத்தியில் பெருத்த மரியாதையை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கு கொரோனா நிதியுதவி அளித்தவர்

இந்தியாவில் கொரோனா கடுமையாகத் தாக்கியபோது, ஆக்சிஜன் தேவைக்காக 50 ஆயிரம் டாலர் நிதியுதவி அளித்தவர் பாட் கம்மின்ஸ் – BBC 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *