தலைமுடியை தயார் செய்தவர் மரணம்

Byadmin

Nov 16, 2023

மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்கசோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி லொகுஹேவகே என்ற 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு மூன்று வயதில் பெண் பிள்ளையும் உள்ளது.

தேசிய பயிலுனர் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபையில் முகாமைத்துவ உதவியாளராக சிறிது காலம் பணியாற்றிய திருமதி.சுபாஷினி, குழந்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *