மின் கட்டண பட்டியல் குறித்த முடிவு

Byadmin

Nov 14, 2023


மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லை எனில், 1987 என்ற எண்ணுக்கு குறுந்தகவலை (SMS) அனுப்புவதன் மூலமும் இந்த ebil சேவையில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL <இடைவௌி> மின்சாரக் கணக்கு எண் <இடைவௌி> மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்ப வேண்டும்.

தற்போது தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களிலும், மாத்தறை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களிலும் மட்டுமே ebil வழங்கப்படுகின்றன.

இதற்கமைய அச்சிடப்பட்ட மின்கட்டண பட்டியலை முற்றிலுமாக நிறுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

மேலும் இந்த நடவடிக்கையின் ஊடாக எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இச்சேவையை வழங்குவதே இலக்கு என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *