பழங்களில் இரசாயனம் கலப்பு – மக்களே அவதானம்

Byadmin

Nov 14, 2023

பூநகரிச் சந்தைகளில் பழங்களை பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு, பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெளிவூட்டினர்.

பூநகரிப் பகுதியிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் பழவிற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பலசரக்குக் கடைகளின் களஞ்சியப் பகுதி மற்றும் விற்பனைப் பகுதிகளில் மாசடையும் வகையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, வழக்கு தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும் பழவிற்பனை நிலையங்கள் சோதனையிடப்பட்டபோது, அங்கு பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படுத்தும் இரசாயனங்கள் தெளிகருவிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த பழ வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பாதுகாப்பான முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *