விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம்

Byadmin

Nov 13, 2023

விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது.

 ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூபா 38 பில்லியன் அறவிடப்படுகிறது. 
எனவே, அரசதுறை ஊழியர்களின் பங்களிப்பு, இதனை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை.
 எனவே இவ் ஓய்வூதியப் பங்களிப்பிற்காக அறவிடப்படும் சதவீதத்தை 2024 ஏப்ரல் முதல் அனைத்து சேவைப் பிரிவினருக்கும் 8  சதவீதமாக அதிகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் முன்மொழியப்பட்டது.
இச்சரிசெய்தல் மூலம் ஆண்டுதோறும் ரூபா 09 பில்லியனை மேலதிகமாக அறவிடுவதற்கு முடிவதுடன் இது விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *