காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேலின் குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கும், அதே வேளையில் காசாவில் நடைபெறும் குண்டுத் தாக்குதல்களை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.