இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி “பலஸ்தீனத்தில் நடைபெறும் இனப் படுகொலையை உடனடியாக தடுக்க சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.”
மேலும், அவர் தனது டுவிட்டர் தளத்திலும் இது தொடர்பான பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியதாவது,”நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் இந்தப் போரில், பலஸ்தீனத்தில் இதுவரை சுமார் 5,000 குழந்தைகள் உட்பட 10,000 பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல நூறு குடும்பங்களுக்கும் மேல் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன, அகதி முகாம்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றன,
இத்தகைய கொடூரங்கள் அரங்கேறுகையில், சுதந்திர உலகின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்கள் பலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் இந்த இனப்படுகொலைக்கு நிதி வழங்கி, ஆதரவளித்து வருவது வேதனையை அளிக்கிறது.
இதனை நிறுத்திக்கொண்டு, குறைந்தபட்ச நடவடிக்கையாக சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும்,
தற்போது உடனடியாக இதனைச் செய்யாவிட்டால் எந்த விதமான தார்மிக அறத்தையும் பேணாமல் உலக அழிவை கண்முன் காண நேரிடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.