மொங்கோலிய மன்னன் ஹுலாகோ கான் பாக்தாத் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய போது, அவனது மகள் பாக்தாத் நகரை சுற்றிப்பார்க்க அவளது பரிவாரங்களோடு சென்றாள்.
ஒரு இடத்தில் ஒரு மனிதரை சூழ மக்கள் கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர் யார்? என விசாரித்தாள். ‘அவர் முஸ்லிம்களின் மார்க்க அறிஞர் ஒருவர்’ என்று சொன்னார்கள்.
அவரை அவளிடம் வரவழைத்து வரும் படி கட்டளையிட்டாள். அந்த அறிஞர் அவளிடம் கொண்டுவரப்பட்டார்.
‘நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கக்கூடியவர்கள் தானே?’ என அவள் கேட்டாள்.
‘ஆம்’ என்று அறிஞர் பதிலளித்தார்.
‘அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உதவி செய்வான், என்று நீங்கள் நம்புகிறீர்களா?’ என அவள் கேட்டாள்.
‘ஆம்’ என்று அறிஞர் பதிலளித்தார்.
‘இதன் அர்த்தம், உங்களை விட எங்களை அல்லாஹ்வுக்கு பிடித்திருக்கிறது என்று தானே அர்த்தம்?’ என அவள் வினவினாள்.
‘இல்லவே இல்லை’ என அறிஞர் சொன்னார்.
‘ஏன், இல்லை என்கிறீர்கள் ‘ என அவள் கேட்டாள்.
‘ஆடு மேய்ப்பவனை உங்களுக்கு தெரியுமா?’ என அறிஞர் கேட்டார்.
‘ஆம், தெரியுமே’ என்றாள்.
‘அவனுடன் சில நாய்களும் இருக்கும் தெரியுமா?’ என்றார்.
‘ஆம், இருக்குமே’ என்றாள்.
‘அவனது கட்டுப்பாட்டை விட்டும் சில ஆடுகள் வழி மாறி தப்பியோடினால் அந்த இடையன் என்ன செய்வான்?’ என கேட்டார்.
‘நாய்களை அனுப்பி வழி மாறிய ஆடுகளை அவனின் கட்டுப்பாட்டின் கீழ் மீட்டி எடுப்பான்’ என்றாள்.
‘ஆடுகளை எவ்வளவு நேரம் நாய்கள் விரட்டும்?’ என கேட்டார்.
‘ஆடுகள் வழி மாறி தப்பித்தோட நினைக்கும் போதெல்லாம் விரட்டும்’ என அவள் கூறினாள்.
‘மங்கோளியர்களே! நீங்கள் தான் அல்லாஹ்வின் பூமியில் அவனது நாய்கள்! அவனது வழியை விட்டும், கட்டுப்பாட்டை விட்டும் நாம் விரண்டோடும் போதெல்லாம் உங்களை வைத்து எங்களை விரட்டிப் பிடிப்பான். அவன் வழிக்கு நாம் வரும் வரை இது நடந்துகொண்டே இருக்கும்.’ என அந்த அறிஞர் விளக்கம் கொடுத்தார்.
நேற்று நாம் இருந்த அதே நிலையில்தான் இன்றும் நாம் இருக்கிறோம். நெதன்யாகு, மெக்ரோன், டிரம்பு, மோடி போன்ற நாய்கள் நம்மை விரட்டத்தான் செய்யும்.
நாம் வழி தவறிய ஆடுகளாக இருக்கும் போதெல்லாம் நாய்கள் விரட்டும்.
அந்த நேரம் பார்த்து ஓநாய்களுக்கு நாம் இரையானால் எதுவும் செய்ய முடியாது.
✍ தமிழாக்கம் / imran farook