அனுராதபுரத்தில் நடந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம்

Byadmin

Nov 2, 2023

முச்சக்கரவண்டியில் விழுந்து கிடந்த பணப்பையை எடுத்து அதிலிருந்த 98,000 ரூபாய் பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.
பணப்பையை கண்டெடுத்த பெண் அதனை அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் பணப்பையின் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமது வீட்டிற்கு மின்சாதனங்களை கொண்டு செல்ல வந்தபோது பணப்பை தவறவிட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியான நேரத்தில் இவ்வாறான ஒரு நல்ல செயலை செய்ததற்காக குறித்த பெண்ணுக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது நன்றிகளை தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *