ஐஸ் போதைப் பொருளினால் உயிரிழப்பு

Byadmin

Nov 2, 2023

நெடுந்தீவில் ஐஸ் போதைப் பொருள் பாவனையினால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குணாராசா தனுஷன் (வயது 25) என்பவரது சடலம் நேற்றைய தினம் இரவு மீட்கப்பட்டது. 

அவரது அம்மம்மா வீட்டில் தங்கியிருந்து நேற்றையதினம் அதிகாலை வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவரை மாலை வரை காணமையால் தேடியபோதே ஆட்களற்ற வீட்டில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனகள் மேற்கொள்ளப்பட்டதிலேயே இத்தகவல் வெளியாகியானதாகத் தெரிவிக்கப்பட்டது. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *