இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியை தொடர்பு கொண்டார் சவூதி அரேபிய வெளி விவகார அமைச்சர் இளவரசர் பைஸல்
நேற்றைய தினம் -29- சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் அப்துள்ளாஹ் இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாக சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ள
ஆரம்பமாக பலஸ்தீன் விடயத்தில் ஐ.நா. வில் சென்ற வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தான்.
சென்ற வெள்ளிக்கிழமை ஐ.நா. சபையில் காஸாவில் இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவில் சர்வதேச ரீதியான சட்டங்கள் நியமங்கள், மனி நேயத்தைப் பின்பற்றி நிவாரணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உடனடியாக அணுமதிக்க வேண்டும் எனவும் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக இலங்கையும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இருவரும் காஸாவின் நிலவரத்துடன் தொடர்புடைய பல விடயங்களை கலந்துரையாடினர்.