ஆந்திர ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Byadmin

Oct 30, 2023

ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று (29) இரவு ஒரு பயணித்த பயணிகள் ரயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்திருந்த போது விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு பயணித்த மற்றொரு பயணிகள் ரயில் அதன் பின்புறத்தில் பலமாக மோதியது.

இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 13 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய், லோசான காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்திய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *