மத்திய கிழக்கின் தற்போதய நிலை மற்றும் பலஸ்தீன விவகாரம் பற்றியும் கலந்துரையாடுவதற்காக ஒன்று கூட்டப்பட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உயர்மட்டக் கூட்டம் அன்மையில் நடைபெற்றது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸவுதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் பலஸ்தீன் தொடர்பில் ஸவுதியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதோடு பலஸ்தீன மக்களுக்காக சர்வதேசத் தலைவர்களை ஒன்றினையுமாறு அழைப்பு விடுத்தார். முக்கியத்துமிக்க அவரது உரையின் முக்கிய விடங்களை ஸவுதி வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அவரது உரையில்,
- உடனடியாக பலஸ்தீனத்தில் போரை நிறுத்துமாறும் இஸ்ரேல் மேற்கொள்ளும் கொலைகளை நிறுத்துமாறும் கைதிகளை விடுதலை செய்யுமாறும் சர்வதேச சட்டங்களை விதிமுறைகளைப் பேனுமாறும் ஸவுதிய அரேபிய அழைக்கின்றது.
- ஸவுதி அரேபியா தன்னால் முடிந்த அளவு நேச நாடுகள் அனைத்துடனும் தொடர்பு கொண்டு இப்போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியையும் செய்து வருகின்றது. மற்றும் பலஸ்தீனத்தில் நடக்கும் தொடர் அழிவுகளுக்கும் நிலையான தீர்வை ஏற்படுத்தவும் தொடர்ந்தேர்ச்சியாக உழைக்கின்றது.
- சர்வதேச ரீதியில் அனைவரும் ஏற்றுக்கொண்ட மனித நேய விடயங்கள், நாடுகளுக்கிடையிலான சட்டங்கள் சமாதானமான தொடர்புக்கு உதவும் விதிகள் விடயத்தில் சர்வதேச சமூகம் இளிவுபடுத்தப்படும்போது இயங்காமல் எதுவும் செய்யாதிருப்பது பெரும் அதிருப்தி, பெரும் ஏமாற்றம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
- இஸ்ரேலியப் படைகள் காஸாவில் மேற்கொள்ளும் சமூக அழிப்பையும் காஸா மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதையும் பார்த்துக் கொண்டு சர்வதேச சமூகம் மௌனமாக இருப்பதும் போராட்டத்தை நிறுத்த இதுவரை முயற்சிக்காமல் இருப்பதும் நாம் விரும்பும் ஸ்திரத் தன்மைக்கும் பாதுகாப்பிற்கும் ஒருபோதும் உதவாது.
- பாதுகாப்புச் சபை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்காக வேலை செய்ய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இஸ்ரேலின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கான மிகச் செரியான உறுதியான முடிவுகளை ஐ.நா. பாதுகாப்புச் சபை எடுப்பதற்குரிய காலம் நெருங்கிவிட்டது.
- சென்ற பல தசாப்தங்களாக பலஸ்தீன் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றாமைதான் பலஸ்தீனக் கொடுமைகள் தொடர்பவதற்கான காரணமாகும்.
நிச்சயமாக பலஸ்தீன் இஸ்ரேலியப் பிரச்சினைக்குரிய காரணங்களை அறியாதிருப்பது பலஸ்தீனப் பிரச்சினைக்கான நீதமான தீர்வுக்கோ அல்லது பிராந்தியத்தின் அமைதி பாதுகாப்புக்கு இட்டுச் செல்லாது.