ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோன்யோ கூட்டேரெஷ், காஸாவில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாக அமைந்திருக்கின்றன என்றும், அதுகுறித்து தாம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும்’ தெரிவித்திருக்கிறார்.
கூட்டேரெஷ் குடிமக்களை ‘மனிதக் கேடயங்களாக’ பயன்படுத்துவதையும், மக்கள் வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகும் தெற்கு காஸா மீது குண்டுவீசுவதையும் கண்டித்திருக்கிறார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் ‘காரணமின்றி நடக்கவில்லை’ என்று கூட்டேரெஷ் கூறியதற்கு இஸ்ரேலிய தூதர்கள் கோபமாக எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர். BBC