குற்றவாளி தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 9 ஆம் திகதி முதல் தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071 8591960 பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நிலையத் தளபதி பிரிவு (1) – 0718596150