புதிய ஆயுத நவீன ஆயுதங்களை கொண்டு இன்று ஒரு பொலிஸ்காரன் போன்று காட்டுமிராண்டிதனம் காட்டுகின்ற இந்த இஸ்ரலை இந்த சபையில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
அதே நேரம் சுதந்திர பலஸ்தீனராச்சியம் ஏற்படுத்துவதற்கு இந்தியா வெளியுறவுத்துறை அறிவித்துருக்கின்றது. அதுபோன்று ரஸ்யா அறிவித்துருக்கின்றது, சீனா அறிவித்திருக்கின்றது. அதே போன்று முஸ்லிம் உலக நாடுகள் அனைத்தும் அறிவித்திருக்கின்றது. இனியும் தாமதிக்காமல் அமைதியும் ஒழுங்கும் உலகம் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும் என்றால் பலஸ்தீன மக்களுக்கு அல் அக்ஸா எங்களுடைய புனித தளம் உள்ளடங்கலான ஜெருஸ்ஸலாம் நகரத்திலுடனான புதிய பலஸ்தீன ராச்சியம் உருவாக்கப்பட வேண்டும். இந்த உலகில் கடந்த 80 வருட காலமாக அநியாயமாக பாதிக்கப்பட்டு இருக்கின்ற பலஸ்தீன குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்கள் மரணித்தவர்களுடைய ஆத்ம திருப்தி அடைவதற்காக உலக இந்த புதிய ஒழுங்கில் உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமையம் புதிய பலஸ்தீனராச்சியத்தை உடனடியாக ஏற்படுத்துவதக்கான காஸா முனைத்தாக்குதலை நிறுத்துவதற்கு இஸ்ரேலை வேண்டிக்கொள்ள வேண்டும். என்றார்