ஜோபைடன் இஸ்ரேலுக்கு செல்ல முன்னர் காஸாவில் அல் அஹ்லி மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலை அவர் கண்டித்து அறிக்கை விட்டிருந்தார், எனினும் அவருடனான சந்திப்பை முஸ்லிம் நாடுகள் நிராகரித்து விட்டன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.
இதேவேளை தமது படைகள் தாக்கவில்லை ஹமாஸ் போராளிகளே மருத்துவமனை மீது குண்டு வீசியுள்ளனர் என இஸ்ரேல் பல்டியடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும் உலக நாடுகள் இஸ்ரேலின் கொடூரமான இந்த செயற்பாட்டை கண்டித்து வருகின்றன.
உலகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது.
இஸ்ரேலின் இந்த கொலைவெறிக்கு 24 மணிநேரத்திற்குள் நாம் பதிலடி கொடுப்போம் என அல்கஸ்ஸாம் போராளிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி 2 நாள் பயணமாக சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ளார்.சீனாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இரு நாடுகளிடையே எரிசக்தி, உயர் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் இஸ்ரேல்-பலஸ்தீனம் போர் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.