பிள்ளைக்கு பாம்பு கடித்திருக்க, இரைப்பை அழற்சி இருக்கலாம் என மருந்து கொடுத்த தாய்

Byadmin

Oct 18, 2023

பாம்பு கடித்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பதினொரு வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம, கொடகம சுபாரதி மகாமத்திய வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பனாகொட சமகி மாவத்தையில் வசித்து வந்த சமன்மாலி என்ற 11 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர்.

உயிரிழந்த மாணவி தனது மைத்துனியுடன் கடைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் பாம்பு கடித்துள்ளது.

பின்னர் அவருடைய தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வரை தனக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி இருந்ததாக சிறுமி கூறியுள்ளார்.

இதனை அடுத்து சிறுமியின் தாய் பாம்பு கடித்ததை அறியாமல் குழந்தைக்கு இரைப்பை அழற்சி இருக்கலாம் என நினைத்து மருந்து கொடுத்துள்ளார்.

அப்போது சிறுமி வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார.

இதனை தொடர்ந்து 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று (18) கொடகம பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *