இரும்புக் கம்பியால் முருங்கைக்காய் பறித்த பெண் மின்சாரம் தாக்கி மரணம்

Byadmin

Oct 16, 2023

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (15) .இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குமாரதம்பிரான் வீதி 8ஆம் வட்டாரம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரியும் 51 வயதுடைய நவநீதன் சசிகலா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.சம்பவ தினத்தன்று சமையலுக்காக தனது வீட்டின் வீதியோரத்தின் அருகில் உள்ள முருங்கைமரத்தில் முருங்கைக்காய் பறிக்க முற்பட்டபோது அதனூடக சென்று கொண்டிருந்த மின்சாரக்கம்பியில் முருங்கைக்காய் பறித்த இரும்பு கம்பி தட்டுப்பட்டதனால் குறித்த பெண் மின்சாரம் தாக்கிய நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், குறித்த பெண்ணை அவரின் மகள் காப்பற்ற சென்றபோது குறித்த சிறுமிக்கும் மின்சாரம் தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.மண்டூர் தினகரன் நிருபர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *