30 அடி பள்ளத்தில், வீழ்ந்த முச்சக்கரவண்டி ஒன்று

Byadmin

Oct 15, 2023

தெனியாய நாதகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெவரலிய, நாதகல அம்பகஸ்தன்ன பிரதேசத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்றில் தொழில் புரிந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெனியாய, ஒலகந்த, தெனியாய தோட்டத்தில் வசிக்கும் கந்தசாமி சந்திரா (47) என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்பியூலன்ஸ் மூலம் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதி மற்றும் காயமடைந்த ஏனைய இரு பயணிகளும் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *