பகுப்பாய்வுக்கு மாலு (மீன்) – 15 வயது மாணவன் உயிரிழப்பு

Byadmin

Oct 11, 2023

மாலு (மீன்) பணிஸ் உண்டு சுகவீனமடைந்த 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை எதிர்பார்ப்பதாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சடலத்தின் மாதிரிகள் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்காக

அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும் எல்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பி.டபிள்யூ.எல்.எஸ் சந்தகென் வடுகே  குறிப்பிட்டுள்ளளார்.

கடந்த 2ஆம் திகதியன்று சில பேக்கரி தயாரிப்பாளர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  மாலு  பணிஸ்களில் ஒன்றை உட்கொண்ட மாணவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து, நியாகம  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் பல ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அடுத்த நாள், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டடுள்ளது.

இந்நிலையில்  சிகிச்சைகள் பலனின்றி மாணவன் உயரிழிந்ததை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *