கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த 17 பேரில் ஐவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனையோருக்கு அவசர விபத்துப்பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளுப்பிட்டி, லிபட்டி சந்திக்கு அருகில் பாரிய மரம் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது விழுந்ததால் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.