இன்றைய வானிலை அறிக்கை
ஐந்து நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. இது குறித்து தேதிய கட்டட ஆராச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் காற்றின் தரம்…
விவசாயத் திணைக்களத்தின் SMS சேவை
விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவிக்கிறது. இதன் மூலம் 10 பயிர்…
வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த சிசு
வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசுவை, பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் அந்த சிசு, திங்கட்கிழமை (10) காலை மீட்கப்பட்டுள்ளது. குவா… குவா… என்று அழுது கொண்டிருந்த இந்த சிசு,…
மஞ்சிக்கடை விபத்தில் 12 பேர் காயம்
கொழும்பு – குருநாகல் வீதி, நால்ல மஞ்சிக்கடை சந்திக்கு அருகில் திங்கட்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் தம்பதெனிய மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பாடசாலை மாணவர்கள் மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.…
பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை
2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதலுக்கு மார்ச் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படுவதாக பரீட்சைகள்…
ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண்
இந்தியாவின் மும்பை நகரில் ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் ஒருவரை , பாதுகாப்பு அதிகாரி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் இறங்க அப்பெண் முற்பட்டபோது அவர்…
தாயின் அருகில் உறங்கிய குழந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை பகுதியில் பிறந்து மூன்று (03) மாதமான குழந்தை இரவு (9 ) தாயாரிடம் பால்…
மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்
நுவரெலியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியின் பொரலந்த பகுதியில், மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து (10) மாலை இடம்பெற்றதாகவும், கந்தபளையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக…
மாடுகளை கடத்தியவர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் திங்கட்கிழமை (10) வட்டுக்கோட்டை பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சுழிபுரத்தில் இருந்தே லொறியில் 3 மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபரை…
விசேட தொடருந்து சேவையினை முன்னெடுப்பதற்குத் தொடருந்து திணைக்களம் நடவடிக்கை
பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு விசேட தொடருந்து சேவையினை முன்னெடுப்பதற்குத் தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…