வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொலை
தம்பகல்ல பொலிஸ் பிரிவில் வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் மகன், மகள் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் இடபெற்றுள்ளது. மகன், மகள், மருமகள்…
மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபர்
கொழும்பு அழகியல் கலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பேருந்தில் பயணிக்கும்போது, ஒரு நபர் மொபைல் போன் மூலம் அவரை காணொளி எடுத்து துன்புறுத்திய சம்பவ2ம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 177 இலக்க கடுவெல-கொள்ளுப்பிட்டி பேருந்தில் நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
கணவனை விவாகரத்து செய்யும் ஹிருணிகா
இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது , திருமணத்திலிருந்து பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம் நீண்ட சிந்தனை மற்றும் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஹிரனும் நானும்…
அரச தொழில்வாய்ப்பு! அமைச்சரவை அங்கீகாரம்
5,800க்கும் அதிகமானவர்களை புதிதாக அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் துறைமுகங்கள், சிவில் விமான சேவை, போக்குவரத்து…
கட்டுப்பணம் செலுத்திய இளைஞர் குழு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட இளைஞர் குழு ஒன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(11) இளைஞர் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.எம்.சீலன்…
அணியின் தலைவர் பதவியை நிராகரித்துள்ள கே.எல் ராகுல்
டெல்லி கேப்பிடல்ஸ்(DC) அணியின் தலைவர் பதவியை கே.எல் ராகுல்(K.L.Rahul) நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், 9 அணிகள் தங்களது அணித்தலைவரை அறிவித்துள்ளன. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ்…
அஸ்வெசும தொடர்பான தீர்வுகளை பெறுவதற்கு புதிய வழி
1924′ என்ற இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடான அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை எவரும் முன்வைத்து தீர்வுகளை மேற்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின்…
புதிய நீதியரசர்கள் மூவர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (11) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே. எஸ். யு. பிரேமசந்திர, கே. பிரியந்த…
கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையில் பங்குபரிவத்தனை நடவடிக்கை இன்றைய தினம் சரிவு தன்மையில் நிறைவடைந்துள்ளது. இதன்படி இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 290.21 புள்ளிகளால் சரிவடைந்து 15,710.57 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், எஸ் எண்ட் பி ஸ்ரீலங்கா 20…
கன மழையால் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகின்றது. பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/409 கிராம…