வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி!
சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியவராவார். பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் அவரது முள்ளந்தண்டு சேதமடைந்தது. அவர் வைத்தியசாலையில் சிகிச்சை…
கொழும்பில் முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண் கைது
முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, சாரதியைத் தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கொழும்பு – கொடகவெல , பல்லேபெத்த பகுதியில் இன்று(07.01.2024) இடம்பெற்றுள்ளது.இதன்போது 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கொடகவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த…
குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்
இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அத்துடன், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் – காணி கொள்வனவு செய்வோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக…
டெங்கு நோய் தொடர்பில் வௌியான தகவல்
நாளாந்தம் 300க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 1,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 643…
மேலும் 08 கைதிகளுக்கு மூளைக் காய்ச்சல்
காலி சிறைச்சாலையில் மேலும் 08 கைதிகள் மூளைக் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.
அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தீவிர சோதனை
மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மைலம்பாவெளியில் வாகனங்களை நிறுத்தி போதை பொருள் கடத்தல் காரர்களை தேடி பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (06) பிற்பகல் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர் இதன்போது 2186 தடை செய்யப்பட்ட சிகரட்டுக்களை…
புதுவருடத்தில் 25,000 பயணிகள் நாட்டுக்கு
இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக…
மேலும் 1,135 பேர் கைது
இன்று (07) நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் 1,135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 46 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 16 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை…
மீண்டும் அதிகரித்த சீமெந்தின் விலை!
மீண்டும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நிர்மாணத் துறை வளர்ச்சியைக் காட்டத் தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறு விலைகளை உயர்த்துவது பாரதூரமான நிலை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இன்று (06) இடம்பெற்ற…