துப்பாக்கியுடன் ஒருவர் கைது
இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹகெலே பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கினியாகல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (04) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில…
ரயிலில் மோதி தம்பதி மரணம்
தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த…
பௌசர் விபத்தில் சாரதி பலி
வீதியை விட்டு விலகிய தண்ணீர் பௌசரின் இயந்திரம் கழற்று ஓடி விபத்துக்கு உள்ளானதில், மூன்று பிள்ளைகளின் தந்தையான, அந்த பௌசரின் சாரதி, சரத் சோமசிறி மரணமடைந்தார். இறக்குவானை- பொத்துபிட்டிய பிரதான வீதியில் மாணிக்க வத்த பகுதியிலயே இந்த விபத்து புதன்கிழமை (04)…
சஞ்சீவ கொலையாளியை சாட்சிகள் அடையாளம் காணவில்லை
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் சாட்சி கூண்டில் வைத்து, பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை சாட்சிகளால் அடையாளம் காண முடியவில்லை. கொழும்பு மேதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல புதன்கிழமை (04)…
கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஆறு உப குழுக்கள்
கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளை பரிசீலித்து உப குழுக்கள் நியமிப்பது தொடர்பில் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் நேற்று…
“புலமைப் பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படாது”
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்போது கிடையாது. ஆனால் இந்த பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதற்கான மாற்றுத்திட்டங்கள் 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி…
வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது?
மாரடைப்பு நெஞ்சுவலிக்கும், வாயு நெஞ்சுவலிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெஞ்சுவலி வாயு, மாரடைப்பு இவை இரண்டிற்கும் நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் இவற்றினை வேறுபடுத்தி பார்ப்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றது. நெஞ்சுவலி ஏற்பட்டதும், இதய பிரச்சனை…
மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
வௌ்ளவத்தையில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை, ராம கிருஷ்ணா பிளேஸில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசையா தவராசா…
எருமை பால் தயிர் VS பசும் பால் தயிர்… எது ஆரோக்கியம்?
பொதுவாகவே பாலும் பால் பொருட்களும் மிகவும் ஆரோக்கியம் நிறைந்து என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்காது. இது கல்சியத்தின் சிறந்த மூலமாகும், இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமானது என்பது அனைவரும் அறிந்ததே. ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் பால் குடிக்க…